Author: ஜெ.ஈழநிலவன்

நதியிடம் ஓர் விண்ணப்பம்

வரம்புகளையும்  குதிரைகளாக நினைத்துக்கொள்கிறோம் கஞ்சி கூழ்கூட அதன் மடியில் வைத்து உண்பதில் ஒரு பூரிப்பு. அதன் முதுகின்மேல் சேற்றில் புதைந்த கால் காவலாளிபோல் கவனிப்பாக இருக்கிறது நாலு மைல் தொலைவில் நதியென படுக்கும் நீர்த்தொட்டி எம்  வயலை தடவிச்செல்வதாக ஒரு எதிர்பார்ப்பு களைத்து வரும் நதி முன்வரிசையில் இருக்கும் வரப்பை நிறைத்துவிட்டு இரவுநேர மின்வெட்டாய் போனபின்…