
தன்னையுண்ணும் ஒருவன் நீண்ட நாட்களாக ஊர்ஊராக யாசித்தும் பசியாற எதுவும் கிடைக்காதவன் நெடிய யோசனைக்குப் பின் உண்பதற்குத் தன்னைத் தேர்ந்து கொண்டான் மலைக்குகை தைல ஓவியத்தில் தொல்குடியொருவன் கையிலேந்திய கூர்ஈட்டியை கைமாறாகப் பெற்று மார்புச் சதையை கிழித்துச் சுவைத்தவன் அடுத்ததாக தன் கெண்டைக்காலில் விளைந்திருக்கும் கொழுத்த திரட்சியினை அறுத்துத் தின்கையில் கடல்கன்னியர் சிப்பிகளை ஆசை ஆசையாகப்…