Author: நரோபா

யுகசந்தியின் கலைஞன்: கூந்தப்பனையை முன்வைத்து

தேர்ந்த எழுத்தாளன் உலகை உன்னிப்பாக கவனிக்கிறான். நாம் அன்றாடம் புழங்கும் வெளியில் நாம் கவனிக்கத் தவறிய ஏதோ ஒன்றை புலனுக்கு உணர்த்தும்போது நம்முள் ஒரு சன்னமான வியப்பு மேலிடுகிறது.“இந்த உலகம் எனக்கும் நன்கு பரிச்சயமானதுதான்.இதை ஏன் நான் கவனிக்கவில்லை?” அறிந்த உலகில் அறியாத ஒன்றைக் காட்டுகிறான். இந்த நம்பகத்தன்மையும் அணுக்கமுமே வாசகன் எழுத்தாளனின் உலகில் நுழைவதற்கான…