Author: புனிதவதி

வரலாறும் தனிமனிதனும்

‘எதிலும் சந்தேகப்படு‘ – கார்ல் மார்க்ஸின் இந்த‌ வாசகம்தான் ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் பரப்பை ஒரு நிலைப்படுத்தும் சூத்திரமாக அமைக்கிறது. இந்நாவலை ஆசிரியர் சை.பீர்முகம்மது அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மையமாக்கி அதனூடே மானுட கீழ்மைகளையும் ஊடாட விட்டுள்ளார். 23.02.1950   புக்கிட் கெப்போங்கில் (ஜொகூர்)   போலிஸ்நிலையத்தில் கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் வழி அக்கினி வளையங்கள் உக்கிரமாக எரியத் …

சுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்

வல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019  சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள்…

நேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்

கடந்த 2016-ல் என் தோழி ஹேமா ஒரு செய்தியைப் புலனம் வழியாக என்னிடத்தில் காட்டினார். வல்லினத்தின் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு அது. பள்ளியில் நான் சில பேச்சுப்போட்டிகளுக்காக மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதுவதால் என்னை ஒரு நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். கதை எழுதி அனுப்பவேண்டிய நாள் 15.09.2016. நானும்…