Author: வெண்பா கீதாயன்

கார்மலின் (கொங்கணி நாவல்): ஒரு பார்வை

இந்திய நிலப்பரப்பின் அறிமுகம் கிடைத்தவர்களுக்கு கோவா காணவேண்டிய இடமென மனதின்  ஆழ்கனவுகளுள் ஒன்றாய் அமைந்திருக்கும். கோவா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் எழுவது கடற்கரையும் மதுவகைகளும் கொண்டாட்டங்களுமாக இருக்கும். பண்பாடு அறிதலுள்ளோர் போர்ச்சுகீசிய வழித்தடங்களைக் காண விருப்பப்படுவர். ஆனால் அந்நிலம் தனக்கென ஒரு தனிமொழியை கொண்டுள்ளது என்பதை அங்கு சென்று வந்த பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். வடக்கே குஜராத்தியும்…