
எம். பி. குடுகுடு மூன்று தடவை கொட்டாவி விட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக நெளிந்தார். அவரது முரட்டு கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி கொட்டாவி விட்டபோது, காற்றில் மெதுவாக அசைந்த தொலைபேசி கம்பிகளில் உல்லாசமாக குதித்துக்கொண்டிருந்த சில சிட்டுக்குருவிகள் பயந்தன. அந்தப் பறவைகள், அப்பாராளுமன்ற உறுப்பினர் தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் உள்ள விடுதியின் கூரைக்கு விருட்டென பறப்பதைப்…