
நெற்றியின் வியர்வை உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன. மரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான…