Author: கே.ஜே. அசோக்குமார்

மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்

கண்களைப் பாதி மூடியபடிதான் வண்டியை ஓட்டினேன். காற்றில் மாலைநேரத்திற்குண்டான ஏதோ ஒலியிருந்தது. இசைக்கருவியின் மென்னொலி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது காற்று. முன்னால் அமர்ந்திருந்த முகிலனின் வலது கையில் பேட். அதை கால்களுக்கு இடையே வைத்துப் பிடித்திருந்தான். இடது கையில் புதிய ஸ்மைலி பந்து இருந்தது. அதை அவன் பிடித்திருந்தவிதம் அழகிய கண்ணாடி பொருளைப் பத்திரமாகப் பிடித்திருந்தது…