Author: எஸ்.ராமகிருஷ்ணன்

வகுப்பறையில் ஒரு திமிங்கலம்

பவித்ரா தனது இடது கையை உயர்த்தி ஆங்கிலத்தில் சப்தமாகச் சொன்னாள் “வகுப்பு முடிய இன்னும் ஐந்து நிமிஷம் தானிருக்கிறது.” அதைக் கேட்டதும் மாணவர்கள் சிரித்தார்கள். அவளது கேலியைக் கவனிக்காமல் சிவானந்தம் மோபிடிக் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பறையிலிருந்த மாணவர்களில் எவரும் பாடத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் இவர்கள் உலகப் புகழ் பெற்ற நாவல் ஒன்றை அறிந்து கொள்ள…

கறுப்பு ரத்தம்

நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது.  மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார்.  அப்படிச் செய்யமுடியாது…