Author: பா. திருச்செந்தாழை

நெருப்பில் வளர்பவை

ததும்பத்ததும்ப மக்காச்சோளத்தட்டைகளுடன் பள்ளத்திற்குள் இறங்கி ஏறித் திணறியபடி தாடிக்கொம்பு விலக்கில் வளைந்து கொண்டிருந்தது வேன். நான் ஓடிப்போய் அதன் முதுகில் கொட்டிக்கிடந்த சோளத்தட்டையில் ஒன்றை வலுப்போட்டு ஒடிக்க முயன்றேன், முடியவில்லை. சாலையோர மரத்திற்குக்கீழே சாயங்கால இருளுக்குள் தனது பள்ளிச்சீருடையுடனும் முகம் கழுவிய வெளிச்சத்துடனும் நின்று கொண்டிருந்த தான்யா வேண்டாமென்பதைப்போல கையை ஆட்டினாள். வேன் நகர்ந்து கொண்டேயிருந்தது.…

த்வந்தம்

நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன்.