
I மாமாவிடம் இருந்து போன் கால் வந்தது.“சேகரு, ஆபிஸிற்கு வா.” என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கேட்குமுன் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பினேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலை என்று கேட்டால் என்னால் சரியாகப் பதில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான்…