பலமுறை பினாங்கு பாலத்தைக் கடந்திருக்கிறேன். அதன் கட்டுமானமும் அழகும் பெரிதும் வசீகரிக்கக்கூடியதுதான். ஆனால் இம்முறை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்குச் செல்கையில், பினாங்கு பாலத்தைக் கடக்கும்போது இனம்புரியாததொரு படபடப்பும் சேர்ந்து கொண்டது. கடலலையில் கிருஷ்ணன், துரைசாமியின் நினைவுகளும் டானு விழுந்த ஐம்பத்தாறாவது தூணும் துரத்திக் கொண்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன் படித்து முடித்த அ. பாண்டியனின்…