Author: மகேந்திரன்

வெள்ளம்

“சிவப்பு நிறத்துல ஒரு பைக் நிக்குது பாருங்க. அங்க நிப்பாட்டுங்க,” என்றான் சுதாகர். ஆட்டோ அவனை அனாதையாக நடுத் தெருவில் விட்டுவிட்டு அவனைச் சுற்றி அரைவட்டமிட்டுச் சென்றது. லேசான தூரல் மட்டுமே இருந்தது. தாமரைப்பூ போட்ட இரும்புக் கதவைத் திறந்து கொண்டு, யாரோ போட்ட மனித கழிவு போல நிற்க்கும் மஞ்சள் கட்டிடத்தை நோக்கி நடந்தான்…