
“சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று” என்று பாதிரியார் தாமஸ், பிராத்தனையில் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொல்ல, இறைவனுக்கு நன்றி கூறி மணலில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்தனர். கடற்கரை காற்றில் பறந்த அவரவர் ஆடைகளைக் கவனமாகப் பிடித்தபடி கலைந்து சென்றனர். கூட்டத்தில் இருந்த தேநீர் கடைக்காரர், “சாமி!” என்று தாமஸை நோக்கிக் கத்தினார். ஆலயத்திற்குள் செல்ல எத்தனித்த…


