
மூன்றடுக்கு மாளிகை என்பது அந்தத் தனித்துவமான கட்டிடத்துக்கு இந்நகர மக்கள் சூட்டியிருக்கும் சிறப்பு பெயர். அந்தப் பெயருக்கு ஏற்றது போல மூன்று மாடிகளைக் கொண்டது அக்கட்டடம். அந்த மூன்றடுக்கு மாளிகை எந்த யுகத்தில் கட்டப்பட்டது? அது உருவான வரலாற்றை எப்படிக் கூறுவது? இதன் தலபுராணம் மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலிருந்து தொடங்குகிறது. அக்காலகட்டத்தில் அந்நியர்களைத்…