
வீட்டில் எவரும் இல்லை. மாசற்ற தனிமையை உணர வேண்டும் என்று உள்மனம் கோரியதால் மனைவியைக் குழந்தையுடன் கோவிலுக்குப் போகச் சொல்லியிருந்தேன். வாடகை ஆட்டோ ஒன்றில் அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்து மல்லாந்தபோதுதான் இவை அனைத்தும் அந்த நிழலின் திட்டமோ என்கிற சந்தேகம் மூண்டது. ஆனால் ஏனோ நான் அஞ்சவில்லை. பதற்றப்படவுமில்லை. பாயின் விளிம்பில் என் உடம்பை…



