Author: நிர்மல்

மத்த யானையின் ஈருரி

“விதண்டாவாதமாகப் பேசுவதை நிறுத்து. இப்படிப் பேசிப் பேசித்தான் எல்லாமே சிக்கலாகிறது. என்னை மடக்கி மடக்கிப் பேசி ‘கிரிட்டிக்கலாக’ அனலைஸ் செய்யாதே,” லலிதா கோபமாகச் சொன்னாள். “என்ன விதண்டாவாதம்? அரை மணிக்கு மேல் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்கிறேன்!” “உனக்குத்தான் நான் பேசினால் காது கேட்பதில்லை!” கோபமாக பரந்தபன் கத்தினான். அவள் ஒரு துளி காப்பியை அருந்தினாள்.…