
சிறு வயது முதலே நான் ஒரு தனிமை விரும்பி. நட்பு வட்டம் என்று எனக்கு இருக்காது. பள்ளிக்குச் செல்லும் முன் நண்பர்கள் எவருமிலர். பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஒரு சில தோழர்கள். அவர்களுடன் பள்ளி அளவிலான நட்பு மட்டுமே. ஆசிரியரான பிறகு ஒரு சில ஆசிரிய நண்பர்கள். அவர்களுடனும் பள்ளிக்கூடம், செய்யும் தொழில் என்ற அளவில்தான்…
