
இலையுதிர் காலத்தில் ஒருநாள் நான் ஓர் உட்புறப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று சளிபிடித்து உடல் காய்ச்சல் கண்டது. நல்ல வேளையாக அப்போது நான் அவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். ஒரு டாக்டரை வரச் சொல்லியிருந்தேன். சொல்லி அரை மணி நேரத்துக்குள் அவர் வந்துவிட்டிருந்தார். ஒல்லியான தேகம், கருமையான தலைமுடி, சராசரி உயரம்…
