Author: ஜோஹன் ராட்ஸி

குரோதம்

சீடேக் நீண்ட காலமாகப் பொறுமையாக இருந்துவிட்டான். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறுமை காக்கவும், கோபத்தை அடக்கவும், பழிவாங்கும் எண்ணம் எழாமல் இருக்கவும் தன்னைத் தானே பழக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இன்று அவன் தனக்குள் எழுப்பியிருந்த அந்தத் தடுப்புச் சுவரில் கசிவு ஏற்படும் நிலை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்குள் கொந்தளித்த வெறுப்பு – நீண்ட காலமாக அழுகி, சீழ்படிந்த வெறுப்பு…