Author: நூர் அடிலா

அப்பா  தற்கொலை செய்து இறந்தார்

கடைசியில் அப்பா தற்கொலை செய்து இறந்துவிட்டார். அதிகாலை தொழுகை நேரத்தில், குளிர்ந்து விறைத்துப் போன அப்பாவின் உடல் வரவேற்பறையில் கிடந்ததாக அம்மா சொன்னார்.  அப்பா இயற்கையான இருதயக் கோளாறாலோ உயர் இரத்த அழுத்தத் தாக்குதலாலோ உயிரிழந்திருக்க சாத்தியமே இல்லை. ஏனென்றால் அப்பா எப்போதும்  ஆரோக்கியமாகத்தான் இருந்தார். மருத்துவர்களும் அதை உறுதிப்படுத்தியதாக அம்மா தின்னமாகக் கூறினார். “உங்களுடைய…