
“ஒருவேளை நான் சிறைப்படுத்தப்பட்டாலோ அல்லது தோக் ஜங்கூட் போல மெர்டேக்கா திடலில் தூக்கிலிடப்பட்டாலோ, நான் அவளை மிகவும் நேசிப்பதாக என் அம்மாவிடம் சொல்லிவிடனும் தெரியுமா.” மாவார் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து ஒருவாறு கண் சிமிட்டினாள். அவளால் இந்தச் சூழலையும் இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்ள முடிந்தது. கிறுக்கு குணம் கொண்ட பெண். அங்கு இருந்தவர்களின்…
