
கிணற்றடிக்கு அருகே தாறுமாறாக வளர்ந்திருந்த தோட்டத்துக்குள் எப்படியாவது ஓடி ஒளித்திட வேண்டும் என்ற பரபரப்பில் பாம்பு வளைந்து, நெளிந்து ஓடியது. மறையும் பாம்பைத் துரத்திக் கொண்டு வேகமாக ஓடி வந்த சிறுவன் புதைந்திருந்த எலும்பில் இடறித் தடக்கினான். அவனுக்கு வந்த முதல் நினைப்பு ‘அக்காட்டச் சொல்ல வேணும்,’ என்பதுதான். அக்காவுக்கு எல்லா விடயமும் அவனை விட…
