Author: ராம்போ குமார்

நிதானம் 

ராமகிருஷ்ணன் நிம்மதியாகத் தூங்கி இன்றோடு ஐந்து வருடங்கள் இருநூற்று பன்னிரண்டு நாட்கள் ஆயிற்று. படுக்கையில் நீட்டி உருண்டு கொள்ளக் கூட அவனால்  முடிந்ததில்லை. ஒரு விரிசல் விழுந்த சுவர் போல இவன் அம்மாவின் உயிர் உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் போன நாளிலிருந்து அப்படித்தான். இவன் சாயும் இடம், அம்மா உயிர் விடைபெறக்காத்திருக்கும்  அந்தக் கட்டிலின் அருகே…