
கைப்பேசியிலிருந்து “சலாம் சாப்!” என்ற அலியின் குரல் எழுந்து வரும் பொழுதே தண்டவாளத்தில் இரண்டு இரயில்கள் எதிரெதிரே வருவது போல் அடுத்த முனையில் காரியாலய அலைபேசி ஒலித்தது. “மிஸ்டர்! உங்களைச் சந்திப்பதற்காக மஹுமூத் என்பவர் வந்திருக்கின்றார், அலி என்பவர் அனுப்பி வைத்ததாகக் கூறுகின்றார்,” வரவேற்பறையிலிருந்த பெண் கூறினாள். சட்டென்று அவன் குழம்பிப் போய் “கொஞ்சம் அமரச் சொல்லுங்கள்,” அவசரமாகக் கூறித் தொலைபேசியைத்…
