
எதிர்வீட்டுக்கு ஒரு நாயோடு அவர்கள் குடிவந்திருந்தார்கள். முதல் நாள் பால் காய்ச்சுவதற்கே முருகேசையும் லட்சுமியையும் அழைத்தார்கள். “சொந்த வீடா கட்டிப் பால் காய்ச்சறாங்க? வாடக வீட்டுக்கு அழப்பு வேறயா? அதுக்குப் போவோணுமா?” என்று கேட்டான் முருகேசு. “சொந்த வீட்டுல இருக்கறமுன்னு பீத்தாதீங்க. வர்றவங்க அலுப்பசிலுப்பமான ஆள் கெடையாது. பெரிய மாளிக மாதிரி ஊடு இருக்குதாம். எதோ…