
என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன. மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே…