Author: கோமகன்

டிலீப் டிடியே

பெயர்: டிலீப்  டிடியே பிறப்பு: நோர்மண்டி தொழில்: பல்கலைக்கழக மாணவன் அப்பா பெயர்: டிடியே பிரான்சுவா தொழில்: மருத்துவர் அம்மா பெயர்: மைதிலி தம்பிப்பிள்ளை                                                                                         *** ஓர் இளவேனிற்காலச் செக்கல் பொழுதில் நோர்மண்டி மத்திய தொடருந்து  நிலையத்தில் திலீப்  டிடியே-யை இறக்கி விட்டு அந்த தொடரூந்து தனது பயணத்தைக் தொடர்ந்தது. டிலீப்  பாரிஸ் சோர்பேண்…

“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை, குறும்படத்தயாரிப்பு, சமூக சேவை, யாழ் என்ரர்ரெயிமென்ற், மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர்  என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே ஈழத்தின் முதல்…

ஆக்காட்டி

திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல்…

எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம்

அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை  இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது…

பருப்பு

குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில்…