
இப்போது நான் வசிப்பது இடைகால் என்னும் கிராமம். இது தனிமையும் அமைதியுமான அழகிய ஒன்று. ஒரு வகையில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் இங்கே இலக்கியம் பேசவோ படித்ததைப் பகிர்ந்து கொள்ளவோ நண்பர்கள் கிடையாது. அதனாலேயே இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பும் போது, எதையோ இழந்தது மாதிரி…