
இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.…