Author: மணிஜெகதீசன். ப.

கோயில் ஓட்டமும், கோவக்கார குருவியும்

இன்னைக்கும் மீட்டிங்கா… கடவுளே… என்னாலா பேசப்போறாங்க… பேச்சு பேச்சு பேச்சு..அவர் பேசுவார், பேசுவார், இன்னும் பேசுவார்… அப்புறம், அப்புறமும் பேசுவார் !!! பேசியதையேப் பேசுவார், பேச்சைக் குறைக்க வேண்டியதைப் பற்றியும் நிறையப் பேசுவார். நாம் பேசவே வேண்டியதில்லை… பேசவும் ஒன்றும் இருக்காது; பேசினாலும் யாரும் கேட்கப்போவதில்லை..பேசித்தான் பாருங்களேன்… அப்புறம்… நீங்கள் பேசியதை நிராகரித்தோ அல்லது ஏற்பதுபோல்…

ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்

பாயா பெசார் (கூலிம், கெடா) ஹிண்ட்ராப் இயக்கத்தின் முக்கிய தளமாகச் செயல்பட்டது. `வெட்டிப் போட்டாலும் ‘கட்டி’க்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று வாழ்ந்த இந்தியர்கள் மொத்தமாக மாறிய தருணம் அது. எப்படி அந்த மனமாற்றம் சாத்தியமானது? அளவற்ற விரக்தியுடன் இருந்த ஒரு சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக, குரலற்று வாழ்ந்தவர்களுக்கு வலிமையான, ஒரு சிலுவைச் சுமப்பவர் அடையாளத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம்…