Author: கோ.புண்ணியவான்

கலை இலக்கிய விழா 8-ஐ முன்வைத்து

மலேசியாவில் இவ்வளவு தீவிரமாக கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வல்லினம் குழுமமே என்பது இலக்கியத்தைச் சார்ந்தவர்களுக்கு சென்றடைந்திருக்கும். இலக்கிய நிகழ்ச்சிகள் ஏன் கலைத்தன்மை (creativity) சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதை சிந்தித்திருக்கிறது வல்லினம். அந்தச் சிந்தனையை செயல் வடிவத்தில் பார்க்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. எத்திசையில் நிகழ்ச்சி நகரும் என்ற சுவாரஸ்யம். நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயார்…

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்

1980-களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக்கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ.கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம்…

கரகம்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில்…

ரேணுகா கவிதைகள்

இலக்கிய வடிவங்களில் மிக அடர்த்தியான கவித்துவமும் அழகியலும் படிமங்களும் கொண்டது கவிதை. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அதன் வாசகப் பரப்பு மிகச்சிறிய எண்ணிக்கையிலானது. ஏன் இந்த முரண்? ஏனெனில் கவிதை அகவயப் பொருள். மௌனத்தின் மொழி. அது அவன் காயத்தை ஆற்றும் மருந்து. அவன் காதலை அவனே திரும்பச் சொல்லிக்கொள்ளும் பரவசப் பதிவு. அவன் ஆற்றாமையை…