Author: கோ.புண்ணியவான்

கரிப்புத் துளிகள்: நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

முன்னாள் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள், ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் நல்லாத்தான் இருக்கோம்போல‘ என்ற எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதை…

ஆபீசிலிருந்து  தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்குள்ளாகவே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து  ஓடி வந்தும்  பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான்  வேலைய்யா. தன்னை ஒரு புழுவென…

வல்லினம் 100- மலேசிய சிங்கை எழுத்தியக்கத்தின் நவீனக் குரல்

வல்லினம் 100 நிகழ்ச்சிக்குப் போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன்.  ரயில் டிக்கெட்டை இன்னும் ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்கு முன்னாலேயே  வல்லின நிகழ்ச்சி தேதியிலேயே என் நெருங்கிய உறவுப்பையனுக்குப் பதிவுத் திருமணம்  என் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது. ஒரு இலக்கிய மனம் அதனைத்  தவிர்த்திருக்கலாம். ஆனால் வீட்டில் பெரிய மனுஷன் தகுதி இது போன்ற…

வல்லினத்தின் புதிய எழுத்துப்போக்கு

இன்றைய காலக்கட்டத்தில் மலேசியாவில் படைப்பிலக்கியம் கொஞ்சமும் தீவிரத்தன்மை இல்லாமல், கேளிக்கைத்தனமாகத்தான் பார்க்கப்படுகின்றது. எந்த எழுத்தாளர் சங்கமும் இதனைத்தான் முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இருக்கும் மொழியை வைத்துக் கொண்டு பத்திரிகையில் கதை கவிதைகளை எழுதுகிறவர்கள் பலர். அவை பிரசுரமானதும் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். அதுதான் இலக்கியம் என நினைக்கிறார்கள். கேளிக்கைகளைக் கொண்டாடுகின்ற மனம்…

தோட்டப்புற வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் கதைகள்

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். மலாயாவின் முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து சேது மகதூம் சாய்பு எழுதியதாக ஒரு பதிவு சொல்கிறது. அதனையே முதல் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டாலும்,  1930 வெ.…

அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் ஒரு சாபக்கேடு கோ.புண்ணியவான்

முதல் முறை குடும்பத்தோடு தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சில்  இனமறியா பதற்றம் ஏறியிருந்தது. அந்நிய நாட்டுப் பயணம் என்பதால் புது இடத்தை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தப் பதற்றம் அது. சென்னையில் யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தபோது தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்த…

பாரியின் ‘சத்து ரிங்கிட்` :வறுமையின் குறியீடு

என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லாப் பின்னடைவுகளுக்கும் காரணமாக இருந்துவந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக்கல்வி பொருளாதாரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை…

எம்.ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி

என் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தேன். நெடுநாட்கள் அலைந்து அலைந்து பலனற்றுச் சோர்ந்து போயிருந்தேன். என்னோடு படித்தவர்கள் என் கண் முன்னாலேயே வேலைக்காகி கை நிறைய சம்பளம் பெறுவதைப் பார்க்கும்போது மனம் விம்மியது. புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி, பெருமையோடும் மிடுக்கோடும் அவர்கள் வேலைக்குச் செல்வதைப்  பார்க்கும்போது பொறுமினேன். வீட்டில் வெட்டியாக இருப்பதைப்…

கலை இலக்கிய விழா 8-ஐ முன்வைத்து

மலேசியாவில் இவ்வளவு தீவிரமாக கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வல்லினம் குழுமமே என்பது இலக்கியத்தைச் சார்ந்தவர்களுக்கு சென்றடைந்திருக்கும். இலக்கிய நிகழ்ச்சிகள் ஏன் கலைத்தன்மை (creativity) சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதை சிந்தித்திருக்கிறது வல்லினம். அந்தச் சிந்தனையை செயல் வடிவத்தில் பார்க்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. எத்திசையில் நிகழ்ச்சி நகரும் என்ற சுவாரஸ்யம். நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயார்…

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்

1980-களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக்கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ.கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம்…

கரகம்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில்…

ரேணுகா கவிதைகள்

இலக்கிய வடிவங்களில் மிக அடர்த்தியான கவித்துவமும் அழகியலும் படிமங்களும் கொண்டது கவிதை. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அதன் வாசகப் பரப்பு மிகச்சிறிய எண்ணிக்கையிலானது. ஏன் இந்த முரண்? ஏனெனில் கவிதை அகவயப் பொருள். மௌனத்தின் மொழி. அது அவன் காயத்தை ஆற்றும் மருந்து. அவன் காதலை அவனே திரும்பச் சொல்லிக்கொள்ளும் பரவசப் பதிவு. அவன் ஆற்றாமையை…