Author: நேசமித்ரன்

நேசமித்ரன் கவிதைகள்

ஒளியை முத்தமிடுதல் மந்திரவாதியின் தொப்பிக்குள் இருந்து மேலெழுகிற துயரநாளின் நிலவு வன்புணர்ந்து மனம்பிறழ்ந்தவள் மீண்டும் மீண்டும் சொல்லும் சொல்லாய் அலைமிதந்தேறுகிறது யாருமற்ற தீவில் பச்சோந்தி மரணநிலையில் கொள்ளும் நிறத்தில் உள்ள நிர்வாணத்துடன் உடன் பயணிக்கிறது தப்பிய விண்மீனின் கிரணம் அவ்வொளிக் கற்றை அத்துணை ஒளிஆண்டுகள் கடந்து பூமியைச் சேர்ந்த போது அந்த நட்சத்திரம் எரிந்து போயிருந்தது…