இளமைக்காலங்களின்
அழுக்குகளை
துவைத்தெடுப்பதற்கு
முதுமைக்குக் கிடைத்த
“புனித நதி”
குளியலறைகள்..
மீண்டும் மீண்டும்
வந்துப் போகுது
இந்தக் குளியலறைக்கு
பகிரங்கப் படுத்தாமலேயே
கழுவி எழுக்கமுடியாத
அழுக்குகளை
சுமந்துகொண்டு
நதியும் முதுமையும்
இதுவரையிலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
யாரோ பேச்சைகேட்டு