Author: இரா.சரவணதீர்த்தா

பி.ரம்லி: கலை – கனவு – கலகம்

‘தூய கனவு நொறுங்கி சிதைந்தது கட்டிய மாளிகை கல்லறை ஆனது இருள் சூழும் வருங்காலம் வருவது நிச்சயம், என் ஆன்மா உழல்கிறது வடக்கும் தெற்கும்’ இது பி.ரம்லியின் வரிகள். அவர் இறுதியாய் எழுதிய மலாய் பாடல் வரிகள். அவர் வாழ்வின் இறுதிப்பகுதியின் அலைக்கழிப்பைச் சொல்லும் வரிகள். 1973 இல் தனது 44வது வயதில் இறப்பதற்கு முன்…

முன்னுரை: கலையின் ஒளிக்குரல்

வல்லினத்தில் தொடர்ந்து வெளிவந்த உலக சினிமா பற்றிய கட்டுரைகள் ‘ஊதா நிறத் தேவதைகள்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. இவை சினிமாவை விமர்சித்துப் பேசும் கட்டுரைகள் அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தைக் கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள்…

வாட்ஜ்டாவும் பச்சை நிற சைக்கிளும்

பல நூற்றாண்டுகளாக, பெண் உரிமைக்கும் அவர்களுக்கான சுதந்திர வெளிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சவூதி அரேபியா இன்று பல மாற்றங்களை கண்டு வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சவூதி மன்னன் சல்மான் தலைமையில் நடக்கும் மாற்றத்தின் வேகமும் அவை  மேற்கத்திய செய்தி ஊடகங்களில் முதல் பக்கச் செய்திகளாகக் காட்டப்படுவதும் எத்தனை நாள் நீடிக்கும் என்ற சந்தேகங்களை பல அரசியல்…

கொல்லப்படும் குறிகள்

3000 வருடங்களுக்கு முன், எகிப்து மன்னராட்சியின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, பண்டைக்கால பாபிருஸ் ஏட்டில் (Papyrus Salt 124) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக டெய்லிமெய்ல் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  Deir el Medina-வில் தங்கியிருந்த பானெப் எனும்  சிறந்த  கட்டிடக்கலை கைவினைஞர் (Paneb) மேல்…

ஊதா நிற தேவதைகள்

1982-இல், எழுத்தாளர் எலிஸ் வால்கர்  எழுதிய ‘The Colour Purple’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்,  இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1985-இல் வெளிவந்தது. இந்நாவலை எழுதிய எலிஸ் வால்கர்  நாவலுக்கான PULIZER விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கர்-அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. Jaws, Indiana Jones, Jurassic Park போன்ற பல வெற்றிப்…

யாழ்ப்பாணத்தில் வல்லினம் 100

வல்லினம் இலக்கியக் குழு மேற்கொண்ட இலங்கை இலக்கியப் பயணத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள நல்லூரில் வல்லினம்100 நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வல்லினக் குழுவினரும் யாழ்ப்பாண வட்டார வாசகர்களும் கலந்து கொண்டு வல்லினம் 100-இல் வெளிவந்த படைப்புகளைத் தொட்டுப் பேசி கலந்துரையாடினர். முதலாவதாக கிருஷ்ணன் நிகழ்ச்சியின் நெறியாளராகப் பொறுப்பேற்று வல்லினத்தின் தற்கால இலக்கிய நடவடிக்கைகளைத் தொட்டு…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள் (பகுதி 2)

ஆதி குமணன் மறைவுக்குப் பிறகே மலேசிய பத்திரிகைச் சூழலில் கணிசமான மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களை அறிவதன் மூலமே இன்றைய பத்திரிகைச் சூழலையும் அறியமுடியும். 28 மார்ச் 2005-இல் ஆதி குமணன் மரணமுற்றார். இவரின் மரணத்திற்குப் பிறகு மலேசிய நண்பனில் நிர்வாகப் பிரச்சினை தலைதூக்கியது. Penerbitan Sahabat Malaysia-வின் கே.டி.என். உரிமத்தை சிக்கந்தர் பாட்ஷா வைத்திருந்தார்.…

ஆண்கள் அழ வேண்டாம்

தான் ஓர் ஆண் என்று மனதார ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண் சமுதாயத்தின் மத்தியில் ஆணாக வாழ, ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனையும்போது ஏற்படும் சிக்கல்களையும் கொடூரங்களையும்  Boys Don’t Cry எனும் படக்  கதையின் வழி காட்டியுள்ளார் இயக்குனர் கிம்பர்லி பியர்ஸ்.( Kimberly Pierce). அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா( Nebraska) மாநிலத்தின் தலைநகரான…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நாளிதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும் பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ்ப்பத்திரிகையை இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால்…

லெஸ்பியன் கடவுள்

ஒவ்வொரு மதமும் தங்களின் கடவுளைத், தங்களின் மொழி வழியாகவும்  கலாச்சாரத்தின் வழியாகவும், நம்பிக்கை வழியாகவும் தொன்று தொட்டு கட்டிக்காத்து வருகிறது. இப்படி தாங்கள் காட்டும் கடவுளே உண்மையானவர் என்றும் தங்களுடைய வேதங்களே இறைவனின் வார்த்தைகள் என்றும் பிரச்சாரம் செய்தும் வருகின்றது. இவ்வுலகம் பாவம் நிறைந்ததாகவும், இந்தப்பாவம் நிறைந்த உலகத்தைக்காப்பற்ற மதபோதகர்களால் இயலும் என்றும் அடிப்படைவாதம் நம்புகிறது.…

பார்ச்: தரிசும் தாகமும்

கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக   தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச்  சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம். படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில்  இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத்  தகவல்களை நேர்மையாகப்…

ஒசாமா: பசியும் பசிக்காத கடவுளும்

சோவியத் யூனியன் படை எடுப்பு, தாலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி, பின் லாடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாதப் படை, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத ராணுவப் படை, அமெரிக்கா ராணுவம் தலையீடு போன்றவற்றில் சிக்கித் தவித்த ஆப்கானிஸ்தான்,  மில்லியன் கணக்கில் கைம்பெண்களையும் அனாதைக் குழந்தைகளையும் 30 ஆண்டுகள் நடந்த போரின் வழி உருவாக்கியுள்ளது. இவர்களின் கணவர்கள்…

முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்

துருக்கியில் வாழும் பெண்கள் தங்களுக்கு உரிமைவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பெண்களின் மேல் செலுத்தப்படும் ஆதிக்கமும் வன்முறையும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறவுக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கான குரல் மறுக்கப்படுகிறது.  2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் மட்டும் 90,483 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, சிறுவயதுப் பெண்களிடம் பாலியல்…

கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!

சட்டப்படி குற்றமாகும் கொலைகளுக்கெல்லாம், சட்டப்படி  தண்டனை கிடைக்கிறதா? அல்லது கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு, சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை  குறைக்கப்படுகிறதா? மண், பொன், பெண்,  ஆகிய மூன்று பழங்குடிக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையில் இருப்பதாக நம்பிக்கொண்டு வாழும் குடும்பங்கள், குடும்பத் தலைவர்கள், கௌரவக் கொலை என்ற பெயரில் பெண்கள் சமுதாயத்தை அணுவணுவாகக்  கொன்று தின்ற பிறகு, மதம் அல்லது பாரம்பரியத்தைக் காரணம் காட்டிச் செய்த…

ஒளி புகா இடங்களின் ஒலி: எளிமையில் உள்ள உண்மை!

எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார். எழுத்துலகில் புதிய அறிமுகம் என்றாலும் எழுத்து இவருக்குப் பழைய நண்பன் என்பதை அவருடைய…