இந்தியர்களின் மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அதனாலே நான் சில கருத்துகளைக் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். இப்போதெல்லாம், ‘அவன் தான் இப்ப எல்லாம், கொடுக்கரானே ஏன் ஓட்டு போட கூடாது…’ என்று பலர் சொல்கிறார்கள். அதில் அதிகமாக நமது முந்தைய தலைமுறையினர்.
பல காலமாக ஓரே குழியில் ஓடி விழுந்த மக்கள். கொடுப்பதை வாங்கி கொண்டும், கொடுக்கப்படுவது விஷமா இல்லை அமிர்தமா என்று தெரியாமலேயே வாங்கி குடித்தனர். அதை நமக்கும் ஊட்டும் சமயத்தில் தான் இன்டராஃப் பெரிய மாற்றத்தையும், நமது இனத்தின் ஒற்றுமையையும் காட்டியது. அதில் கலந்து கொண்ட அனுபவம் திகிலானது. ஆரம்பத்தில் இந்தியர்களின் எழுச்சி பேரணிக்கு முன் நடந்ததை நாம் இப்போது நினைவு கூறவேண்டும்.
ஆங்காங்கே கூட்டம் கூட்டி நமது நிந்தர அடிமைத்தனதை எதிர்த்து லண்டனில் ஒரு வழக்கு. நிரந்தர அடிமை என்கிறாயே என்று பலர் கேட்பது எனக்கு தெரியும். பிரிட்டிஷ் மலாயாவுக்கு சுதந்ததிரம் வழங்க முன் வந்த போது, அவனால் கொண்டு வரப்பட்ட சஞ்சிக்கூலிகளின் கதி என்ன..? நம்மையும் இந்த நாட்டு குடி மக்களாக இங்கேயே விட்டு விட்டு சென்றனர். ஆனால் இன்று நாம் நிரந்தர அடிமையாகி விட்டோம். அதற்கு நாம் அந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வழக்கு. மேலும் நாம் அவர்களிடம் பெரிய இழப்பீட்டு தொகையை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கொடுக்க வேண்டும் என்றனர். நமக்கு போதிய வழக்கறிஞர்களும், பணமும் இல்லை. நாம் ஏழைகள். அதனால் பிரிட்டிஷ் ராணியிடமே எனக்கு வாதாட ஒரு வழக்கறிஞரை கொடு என்று கேட்டோம்.
அவர் கொடுப்பாரா..? அவன் அரசாங்கத்தை எதிர்த்து வாதாட அவனிடமே ஒரு வக்கில் கேட்டால் கொடுப்பானா வெள்ளைக்கார துரை..? அதற்கு, நான் அங்கு வேலை செய்தவன், அவர்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். வெள்ளைக்காரன் அவனின் தவற்றை ஒத்துக் கொள்வான்…. என்று சொன்னவர்தான் வேதமூர்த்தி. அவர் சொன்னது உண்மைதான். வெள்ளையன் நல்லவன்தான். ஆனால் கறுப்பன்..? அதன் பிறகு பல மாநிலங்களில் இருந்து பலர் ஒன்றாக திரண்டனர். அதை கண்டு உலக நாடுகளே அதிர்ந்தது. பாரிசான் அரசாங்கம் மட்டும் எள்ளி நகையாடியது. நம்மை தகாத வார்த்தைகளில் திட்டியதை மறந்து விட்டீர்களா? அன்று அந்தப் பேரணிக்காக வேதமூர்த்தி பேசிய வாய் வார்த்தைகள் காற்றில் பறந்தாலும், எங்கள் காதுக்குள் புகுந்து இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதன் பிறகு இன்டராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டது. தேச நிந்தனை சட்டத்தின் கீழ் எற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பதிலாக மக்கள் சக்தி இயக்கம் உருவானது.
தனேந்திரன் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின் என்ன நடந்தது. மக்கள் சக்தி இயக்கம் தானே உருவான இயக்கமாக நடக்க ஆரம்பித்தது. ஏன்…? எப்படி..? இதெல்லாம் அன்றாட வாழ்வில் அல்லல் படும் இந்தியர்களுக்குத் தெரியுமா..? பின்பு யார் செய்த சதியோ இன்ட்ராஃப் தலைவர்கள் திசைக்கொருப்பக்கம் பிரிந்தார்கள். போன தேர்தலில் இந்தியர்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் பாரிசான் ஆலானது. ஒரு இந்தியர் கூட பாரிசான் கட்சியின் கூடாரத்தில் காணவில்லை. சில நிரந்தர விசுவாசிகள், நிரந்தர அடிமை மனம் படைதவர்கள் இருக்கதான் செய்தார்கள். நம்மைப் பார்த்து இழக்காரமாக நினைத்து எழுச்சி பேரணியை கேவலமாகவும் பேசியவர்கள், எப்போது நமது மேல் கவனம் செலுத்தினார்கள்…? நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள்!
ஹராம் என்று பச்சையாக பேசியதை மறந்து விட்டீர்கள்? நம்மை பார்த்து சிரித்தவர்களின் நிலை என்னவானது? பல மாநிலங்கள் பறிப்போனது. பாரிசான் தனது பலவீனத்தை ஒத்துக்கொண்டது. யாரும் எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்று தைரியத்தில் ஆடியவர்கள். ஷாஆலாமில் இருந்த அம்மன் கோவில் மனிதாபிமானமே இல்லாமல் உடைக்கப்பட்டது. ஏன்? அன்றைய இந்து சங்கத்தலைவர் பல முறை போன் செய்தும் ஒருவன் கூட கேட்டவில்லை. கூடுதலாக பாதுக்காப்பிற்காக சிவப்பு தொப்பி போலிஸ் வேறு. கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று தெரிந்து தானே அந்த பாதுகாப்பு. அன்று கைது ஆனவர்களின் நிலை என்னவானது? அங்கு உள்ள இந்தியர்கள் பின் பாரிசானுக்கு ஓட்டு போட்டார்களா? இல்லை. ஷஆலாமில் பாரிசான் பாஸிடம் தோல்வி அடைந்தது. அவ்வளவு பெரிய கோவிலை உடைக்காமல், கொஞ்சம் மனிதத்தன்மையோடு நடந்து இருக்கலாம். இல்லை! ஏன்? இந்தியர்களின் காவல் கூட்டம் அப்போது எந்த சினிமா பார்த்துக் கொண்டிருந்தது? இன்று அதே இடத்தில் யார் நிற்க போகிறார்கள்? இந்தியர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் தாய் மொழி சார்ந்து வாழ சட்டத்தில் இடம் இல்லை என்று பேசியவனும், இந்துக்களின் கடவுள் பற்றி கேவலாமாக பேசியவனும் தான்… அன்று சிமன்ட் கோவிலை உடைத்தவனின் கட்சி, இப்போது மன கோவிலை உடைத்தார்கள். அதுவும் நாக்கு என்ற இயற்கை இயந்திரத்தை வைத்து!
இந்தியர்கள் கோழைகள்…! இவன் மீது கைவைத்தால் யார் கேட்பார்கள், என்ற அலட்சியம். இப்போது மட்டும் ஐயன் மேன்(Iron Man) மாதிரி ஏன் உதவ வீடு தேடி பாய்ந்து பறந்து வருகிறார்கள். எல்லாம் தோல்வி பயம் தான். ஒரு முறை நாம் பாடம் புகட்டி விட்டோம். இன்று நம் வீடு தேடி ஓட்டுக்கு ஓட்டை பாத்திரம் ஏந்தி வரும் அரசியல் நடிகனிடம் கேளுங்கள் நான் உங்களைப் பார்த்து கேட்கும் கேள்விகளை…. மரண பயம் போல தோல்வி பயமும் இப்படிதான் ஒருவனை பாடாய் படுத்தும் போலும்…. அன்று வாங்கிய அடியினால் இன்று இப்படியேல்லாம் செய்கிறார்கள். திரும்ப அவர்களை ஜெயிக்க வைத்தால், நமது அடுத்த தலைமுறையை கொத்தடிமையாக்கி விடுவோம். இது வேண்டுமா? இன்று அவர்கள் கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்ளுங்கள். அது தவறு கிடையாது. ஆனால் நன்றியை காட்ட அதை லஞ்சம் ஆக்கி விடாதீர்கள். தமிழன் நன்றியை காட்டுவதில் பெயர்ப்போனவன். உங்ளை இதுவரை ஏமாற்றியதற்கு அந்த சிறு தொகையைக் கூட வாங்காவிட்டாள் எப்படி? ஆப்பு வைக்கிர இடத்தில் வைப்போம். இனி அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை எதை வைத்து நம்ப போகிறீர்கள். இதுவரை அவர்களை நம்பி ஓட்டு போட்டது போதும். இனி அவர்களுக்கு ஓட்டு போட்டு மறுபடியும் சந்தர்ப்பம் தர போகிறீர்களா? அல்லது பாக்காதானுக்கு ஓட்டு போட போகிறீர்களா? இனி ஒரு சந்தர்ப்பம்? அல்லது புதியவனுக்கு சந்தர்ப்பம் வழங்க போகிறீர்களா?
பின்னது சுலபம். பாரிசானுக்கு ஓட்டு போடுவது அவர்களுக்கு மேலும் வயிற்றை வளர்க்க உதவும். திரும்பவும் நம்மை அடிமையாக்கி கேவலப்படுத்துவார்கள். பாக்காதானும் அப்படி இருந்தால், எப்படி என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இதுவரை நம்மை ஏமாற்றியவனை காட்டிலும் நாம் நம்ப தகுந்தவர்கள் பாக்காதானே. ‘my enemy’s enemy is my friend’ என்பதை மறந்து விடாதிர்கள். நமக்கும் விடுதலை புலிக்கும் தொடர்பு உண்டு என்று பொய் சொல்லி நமது ஞாயமான கோரிக்கையை உலகின் பார்வையில் திசைத்திருப்பினார்களே! மறந்து விட்டீர்களா! இன்று கொடுக்கும் 500 வெள்ளியைப் பார்த்து இதுவரை நடந்த, அதுவும் போன தேர்தலில் பாரிசானை நாம் ஏன் ஒதுக்கினோம் என்பதை மறந்து விடாதீர்கள். இன்று நமக்கு தேவை புதிய ஆட்சி. அப்புறம் சொல்வோம் அவர்களின் ஆட்சி எப்படி என்பதை…. அதை விட்டு அறிவில்லாமல் அவனும் அப்படிதான் என்று பேசாதீர்கள். அப்படி பேசுவது உங்களின் நாளைய தலைமுறையை அடிமையாக்கும்.