தனிமையில்
எழுதி முடித்ததும்
எழுதி கொண்டிருப்பதும்
இனி எழுத போவதும்
இன்னொரு தனிமையை
பற்றி தான்.
•
ஒருவர் கனவை மற்றொருவர்
மற்றொருவர் கனவை இனொருவர்
திருடித்தான் வாழ வேண்டியிள்ளது
நாளை உங்கள் கனவை நானும்
என் கனவை நீங்களும்
திருட வேண்டிய நிர்பந்தத்தில் தான்
வாழ்க்கை இருப்பு கொள்கிறது.
•
வலிமை இழந்த வார்த்தைகளோடும்
இடைவெளி தொலைத்த வரிகளோடும்
யதார்த்த எல்லைக்குள் இயங்கும்
கவிதையோடும்
என் நெடிய தனிமை பயணிக்கிறது.
•
நீங்கள் தொலைத்ததும்
நான் தேடுவதும்
ஒன்றைத்தான்
கடந்த காலங்களில் தவறிய
கணங்களில் ஏதோ
ஒன்றை.