உமா பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதியைக் கடந்த வாரம் கவனிக்க நேர்ந்தது. கெட்டி அட்டையில் அழகிய முகப்புடனான களஞ்சியம் அது. இரண்டாவது தொகுதியின் இறுதி சில பக்கங்களில் மலேசிய தகவல்கள் தொடங்கினாலும் மூன்றாவது தொகுதியில்தான் பெரும்பாலான மலேசிய தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிந்தது.…