
மலேசியாவில் தோட்டப்புற வாழ்வை தீவிரத்தன்மையுடன் எழுதிக்காட்டும் எழுத்தளராக சீ. முத்துசாமி அறியப்படுகின்றார். ஆயினும், மக்களின் வெளிப்புற போராட்ட வாழ்க்கையைவிட அகச்சிக்கல்களை கவனப்படுத்துவதையே தனது கலையின் நோக்கமாக அவர் கொண்டிருப்பதை ‘மண்புழுக்கள்’ நாவல் தொடங்கி அறியமுடிகிறது. குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதன் வழி அவர் ஆராய்வது அவர்களின் மனச்சிக்கல்களையே என்பது என் அவதானம். தோட்டக்காடுகளின் இருளையும் அடர்ந்த வனங்களையும் மனித மனங்களின் குறியீடாக அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.…