சொற்களும் அர்த்தங்களும் கிளியென்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம் பச்சையைக் குறிக்கலாம் மூக்கைக் குறிக்கலாம் பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் சிறையைக் குறிக்கலாம். சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம். இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’…