குறுங்கதை எனும் வடிவம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக எழுதப்பட்டபோது அது குறித்து தங்கள் புரிதலுக்குள் கட்டமைக்க பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. அவை குமுதம், விகடன் போன்ற இதழ்களின் ஒரு பக்கக் கதைகளின் வடிவம் என்றும், ஒரு வரிக் கதைகள், படக்கதைகள், துணுக்குகள் போன்றவற்றின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாவனை என்றும் சமூக ஊடகங்களுக்கென்றே எளிமையாக்கப்பட்ட கலை வடிவம்…