
இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு…