
வாழும்நெறி, தத்துவம், உளவியல், எனப் பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கும் குறுங்குறிப்புகள் தினமும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவற்றின் ஆக்கிரமிப்பு அதிகம். சில நிமிட காணொளிகளாகவும் குரல் பதிவுகளாகவும் அவை நம் கைக்குள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் வாழ்க்கை பற்றிய அறிவுரைகளாகவும், நமது அன்றாட வாழ்வை விமர்சித்து அதிலிருந்து கடந்துவிட…