
மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி, விமர்சன அளவுகோல் மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…