ஒரு கவிதையை விளக்கிக் கூறமுடிந்தால் அது கவிதையே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. மொழியால் சொல்லித் தீராத ஒன்றை மொழியில் முன்வைக்க முயலும் வடிவம் என்றும் கவிதையைச் சொல்வது உண்டு. எனவே கவிதை என்பது ஒரு செயற்கரிய செயல் எனக் கொள்ளலாம். எது சொல்ல இயலாதது? ஒரு செய்தியைச் சொல்லிவிடலாம், கருத்தைத் தெரிவிக்கலாம், ஆனால் அனுபவத்தின் சாரத்தை,…