எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி ஒருவரிடம் வந்து ‘பழைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் கடவுளைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் கதைகளில் படிக்கிறோம். இப்போது ஏன் கடவுள் யாருக்கும் தெரிவதில்லை,யாருடனும் பேசுவதில்லை’ என்றான். அதற்கவர் ‘ஏனென்றால் இப்போது யாராலும் அவ்வளவு தாழ குனிய முடிவதில்லை. அதனால் தான்’ என்று பதிலளித்தார். கடவுளைக் காணமுடியுமோ…
Author: சபரிநாதன்
மலேசிய கவிஞர்கள் வரிசை – 3 : கோ.புண்ணியவான்
‘உங்கள் கையில் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால், எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவே கண்ணில் படும்’ என்று உளவியலில் ஒரு கூற்று உண்டு. உங்கள் கையில் சுத்தியும் அரிவாளும் மட்டுமே இருக்குமென்றால் எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவும் தலைகளாகவும் தென்படும் என்று அதை நகைச்சுவையாகவும் சொல்வார்கள். சமூகத்தின் பிரச்சனைகளைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கைகளில்…
மலேசிய நவீன கவிஞர்கள் (1) : ந.பச்சைபாலன் கவிதைகள்
ஒரு கவிதையை விளக்கிக் கூறமுடிந்தால் அது கவிதையே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. மொழியால் சொல்லித் தீராத ஒன்றை மொழியில் முன்வைக்க முயலும் வடிவம் என்றும் கவிதையைச் சொல்வது உண்டு. எனவே கவிதை என்பது ஒரு செயற்கரிய செயல் எனக் கொள்ளலாம். எது சொல்ல இயலாதது? ஒரு செய்தியைச் சொல்லிவிடலாம், கருத்தைத் தெரிவிக்கலாம், ஆனால் அனுபவத்தின் சாரத்தை,…