
முனைவர் மு. இளங்கோவன் தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். இளம் வயதிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் ஏடுகள் அறிமுகம் ஆனதால், தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்வழி பன்முக ஆய்வாளராக உருமாறி நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை, மறந்துபோன தமிழறிஞர்களின் வரலாறு, ஆவணப்படம்,…