தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு சந்திப்பு தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பதினைந்தாவது சந்திப்பாக நவீன தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மெளனியின் நான்கு சிறுகதைகளைக் குறித்துக் கடந்த 17.8.2024 மாலை 3.00 மணிக்கு மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்தில் கலந்துரையாடினோம். மெளனி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய இயற்பெயர் எஸ்.மணி…