
தமிழாசியாவின் 22-வது சந்திப்பில் அ. மாதவன் அவரின் புனைவுலகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு சிறுகதைகளைக் கலந்துரையாடினோம். அ.மாதவன் 1970-களில் தொடங்கி கட்டுரை, சிறுகதை, நாவல் எனப் பல இலக்கிய வடிவங்களில் தனது படைப்புகளை வழங்கியுள்ளார். இவருடைய சிறுகதைகள் இயல்புவாதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருப்பதால் இலட்சியங்களுக்கு அப்பாற்பட்டு மனித இயல்புகளான பசி, காமம், வன்மம் ஆகியவற்றில்…